» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 2,747 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

வியாழன் 5, பிப்ரவரி 2026 7:47:30 AM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில், பல்வேறு திட்டங்களின் கீழ் 2,747 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற என் கனவு என் எதிர்காலம் என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் கலந்துகொண்டு 2,747 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், தூத்துக்குடி கோட்டாட்சியர் மி.பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல்முருகன், துணை மேயர் செ.ஜெனிட்டா, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory