» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு : பிப். 11க்கு ஒத்திவைப்பு

வியாழன் 5, பிப்ரவரி 2026 7:42:52 AM (IST)

அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, வருகிற பிப். 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினர், சகோதரர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சர், அவரது மனைவி, மகன் அனந்த ராமகிருஷ்ணன், அமைச்சரின் தம்பிகள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோர் ஆஜராகாத நிலையில், அவரது மூன்று மகன்களில் அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவர் மட்டுமே நேரில் ஆஜராகினர். இதையடுத்து, வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி வசந்தி, இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப். 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory