» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊருக்குள் வந்த மான் தெருநாய்கள் கடித்து பலி!

புதன் 4, பிப்ரவரி 2026 5:02:22 PM (IST)

கயத்தாறில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மான் தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக இறந்தது. 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் ராஜீவ் நகரில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று அங்கு தண்ணீர் தாகம் தீர்க்க வீடுகள் மற்றும் குளத்திற்கு வந்தது. அப்போது தெருநாய்கள் சுற்றி வளைத்து இடித்தது கண்டு அப் பகுதி வழியாக வந்ததெற்குமயிலோடையைச்சேர்த ஆட்டோ டிரைவர் சுடலைக்கண்ணு என்பவர் கீழே இறங்கி நாய்களை துறத்தி மானை தூக்கி கொண்டு கயத்தாறு கால்நடை மருத்துவமனை சிகிச்சைக்காக கொண்டு சென்றார். 

ஆனால் மான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து.இதனை அப்பகுதியில் உள்ள மக்கள் கோவில்பட்டி வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.பின்னர் அவர்கள் வந்து மானைகால்நடைமருத்துவர் வேதிக்கா பிரேத பரிசோதனை செய்து குருமலை காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. கயத்தாறு பகுதியில் தண்ணீர் தேடி வரும் மான்கள் தெருநாய்களால் பலியாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory