» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டோக்களில் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சங்கம் செயலாளர் கே.கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எரிபொருள் விலை கூடுதலைத் தொடர்ந்து ஆட்டோ கட்டணங்கள் முறைப்படுத்தாத நிலையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் கூடுதல் கட்டணம் அதிகமாக நிர்ணயித்து, பொதுமக்கள், பயணிகளிடம் வசூல் செய்கிறார்கள்.
உதாரணமாக, சென்னை, மைசூரு இரயில் வரும் நேரங்களில் மேலூர் இரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல, ஒரு நபருக்கு ₹50/- வீதம், ஷேர் ஆட்டோ (Share Auto) போல வசூல் செய்கிறார்கள்.
அதேபோன்று தைப்பூசம் போன்ற விழா காலங்களில் திருச்செந்தூர் கோவிலிலிருந்து பேருந்து நிலையம் செல்ல ஒரு நடைக்கு ₹200/- வீதம் வசூலிக்கிறார்கள். இதே நடைமுறைதான் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிலவுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, நியாயமான கட்டணத்தை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அதிக சவாரிகள் கிடைக்கும், பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். தயவுசெய்து இதுவிஷயத்தில் முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி கணக்கு : உத்திரப்பிரதேச வாலிபர் கைது
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:36:56 PM (IST)

கலைத்திருவிழாவில் வென்ற மாணவர்களுக்குப் பரிசு: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:42:58 PM (IST)

ஸ்மார்ட் கார்டுகளில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:18:25 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ரூ. 784 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:12:09 PM (IST)

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல் : காவல் நிலையம் முற்றுகை!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:02:32 PM (IST)

வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 3:55:28 PM (IST)











இது தான்Feb 4, 2026 - 11:23:04 AM | Posted IP 162.1*****