» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொரியர் பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் விசாரணை!
வியாழன் 11, டிசம்பர் 2025 9:19:00 PM (IST)

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட சுமார் 112 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சி. மதனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி இன்று தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன், சார்பு ஆய்வாளர் காவுராஜன் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-I சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்தனசேகர் மற்றும் காவலர் ஆறுமுகநயினார் ஆகியோர் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள ஒரு கொரியர் சர்வீஸின் குடோனை சோதனை செய்தனர்.
அதில் அங்கு சந்தேகத்திற்கிடமாக பெங்களூரில் வந்த 5 பார்சல்களை பிரித்துபார்க்கும் போது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக போலீசார் சுமார் 112 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வாலிபர் கைது; செல்போன் பறிமுதல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:07:04 AM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)










