» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:47:06 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஈகை விழாவில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்மஸ் ஈகை விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். நாசரேத் தூய யோவான் பேராலய உதவி குரு தனசேகர் ராஜா ஆரம்ப ஜெபம் செய்து கிறிஸ்மஸ் செய்தி வழங்கினார். பாடகர் குழுவினர் கிறிஸ்மஸ் பாடல்களைப் பாடினர். கிறிஸ்து பிறப்பை தெரிவிக்கும் வண்ணம் வேத பாடங்கள் வாசிக்கப்பட்டன. மாணவர்களின் கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கிறிஸ்து பிறந்த முன்னனை காட்சியினை தத்ரூபமாக மாணவர்கள் நடித்து காண்பித்தனர்.
தொடர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சார்பில் கிறிஸ்மஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் மதிய விருந்தும், கிறிஸ்மஸ் கேக்குகளும் கொடுக்கப்பட்டது. நிறைவாக தமிழ் ஆசிரியர் வின்ஸ்டன் ஜோஸ்வா ஜெபம் செய்தார்.தமிழ் ஆசிரியர் அம்புரோஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை, உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், அறிவியல் ஆசிரியை ஜெயந்தி சுபாஷினி, ஓவிய ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர், தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஜேசன் சாமுவேல் மற்றும் ஜெய்சன் பாபு, தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










