» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்

ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவில் தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலந்து தண்ணீர் நச்சுத் தன்மை ஆனதால் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. 

தூத்துக்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் உள்ளது இந்த தெப்பக்குளம் கடந்த 1996 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் தைப்பூசம் திருநாளன்று தெப்பக்குளத்தில் உற்சவம் நடைபெறும். தற்போது தெப்பக்குளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் மற்றும் ஆமைகள் உள்ளது. 

இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தெப்பக்குளம் நிரம்பி வழிந்தது மேலும் சாக்கடை நீரும் தெப்பக்குளத்துக்குள் வந்ததால் தண்ணீர் நிறம் மாறி  தினசரி 10க்கும் மேற்பட்ட மீன்கள் இறந்த வண்ணம் இருந்தன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர் சரோஜா தலைமையிலான அதிகாரிகள் தொப்ப குளத்தில் உள்ள தண்ணீரை மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்பினார்கள். இந்த சோதனையில் தண்ணீரில் நச்சுத்தன்மை இருப்பதாக அறிக்கை வந்ததாக கூறப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரில் பார்வையிட்டு தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் ராட்சத மோட்டார் வைத்து அகற்றும் நடைபெற்றது. 

தெப்பக்குளத்தை முழுமையாக தூர் வாரி அடியில் உள்ள அலிகளை முழுவதும் எடுத்து விட்டு குருத்து மணல் அடித்து பின்னர் மாநகராட்சி தண்ணீரை சேமித்து வைத்து வளர்ப்பு மீன்கள் விட இருப்பதாகவும் பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் திருநாளில் உற்சவம் நடப்பதற்கு முன்னால் தெப்பக்குளம் சீரமைத்து பூங்காவும் திறக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory