» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிரைவரை கொலை செய்ய முயற்சி: 6 பேர் கும்பல் கைது
புதன் 3, டிசம்பர் 2025 8:19:55 AM (IST)
தூத்துக்குடி அருகே ரூ.5 ஆயிரம் கடனை திருப்பி கேட்டதால் ஏற்பட்ட பிரச்சினையில் டிரைவரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பவானிநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருடைய மகன் சதீஷ் (26). டிரைவர். இவரிடம் தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் குணசேகரன் என்ற குணா என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ரூ.5 ஆயிரம் கடன் வாங்கினாராம். அதனை திருப்பி கேட்ட போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் புதுக்கோட்டை பவானிநகர் அருகே மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது, அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் குணசேகரன் என்ற குணா உட்பட 6 பேர் சதீசை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றார்களாம். ஆனால் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது, அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டதால், 6 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரன் என்ற குணா மற்றும், திரு.வி.க.நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுடலை (33), தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் மனோகரன் (24), திரு.வி.க.நகரை சேர்ந்த வாசுதேவன் மகன் பரத்விக்னேஷ் என்ற பரத் (29), புதுக்கோட்டை பிரகாஷ் நகரை சேர்ந்த முருகேசன் மகன் முத்துக்குமார் (25), அய்யனார் காலனியை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (23) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் : 20 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.75.25 லட்சம் வசூல்!
சனி 18, ஜூலை 2026 5:17:07 PM (IST)

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை முயற்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்!
சனி 18, ஜூலை 2026 4:53:16 PM (IST)

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)

ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:46:17 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)








