» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தண்டவாளத்தில் இளம்பெண் சடலம்: போலீசார் விசாரணை!
புதன் 3, டிசம்பர் 2025 7:47:52 AM (IST)
கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் கிடந்த இளம்பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி- கடம்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு நேற்றுதகவல் கிடைத்தது. சடலத்தை போலீசார் மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அவர், மந்தித்தோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த சிவசங்கரநாராயணன் மகள் ரம்யா (18) என்பதும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிப்ளமோ படித்து வந்த மாணவி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா, தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்தாரா என ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








