» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏரல் ஆற்றங்கரையில் ஸ்ரீ கணேசர் பள்ளி என்.சி.சி., மாணவர்கள் தூய்மைப்பணி
செவ்வாய் 2, டிசம்பர் 2025 7:45:44 PM (IST)

ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் பணிக்க நாடார் குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி., மாணவர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நெல்லை 9 சிக்னல் கம்பெனி அதிகாரி கமாண்டிங் பங்கஜ் நாராயணன் அலோசனையின்பேரில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி என்.சி., சார்பில் ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரையில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. பள்ளி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.சி.சி., அலுவலர் ராஜகுமார் வரவேற்றார். தலைமையாசிரியர் (பொறுப்பு) சுரேஷ் காமராஜ் கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். 9 சிக்னல் கம்பெனி சுபேதார் ஜெகத் சிங், டி.ஹெச்.எம். சுந்தர் ஆகியோர் வழி நடத்தினர்.
இந்த பணியில் மாணவ, மாணவிகள் 85 பேர் கலந்து கொண்டு ஆற்றின் உள் பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் பைகள், உடைந்த பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகித குப்பைகளை சேகரித்து ஏரல் டவுண் பஞ்., குப்பை தொட்டியில் சேர்த்தனர். பணியில் ஈடுபட்ட மாணவர்களை ஸ்ரீ கணேசர் ஆங்கிலப்பள்ளி முதல்வர் டாக்டர் மௌலாதேவி, ஏரல் வியாபாரி சங்க செயலாளர் விஜயராகவன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை ஸ்ரீ கணேசர் பள்ளி தேசிய மாணவர் படை அலுவலகம் மற்றும் பள்ளி நிர்வாகம் இணைந்து செய்திருந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் : 20 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.75.25 லட்சம் வசூல்!
சனி 18, ஜூலை 2026 5:17:07 PM (IST)

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை முயற்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்!
சனி 18, ஜூலை 2026 4:53:16 PM (IST)

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)

ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:46:17 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)








