» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தலைமை அலுவலகத்தில் முற்றுகை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:40:58 PM (IST)

தூத்துக்குடியில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காலி பாட்டில்களை திரும்பி ஒப்படைக்கும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது மாற்றாக பார் நடத்தும் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளை அடைத்து விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் மதுரை மண்டல மேலாளர் இளவரசன், மாவட்ட மேலாளர் அய்யப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் : மீன்வளத்துறை எச்சரிக்கை!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:57:23 PM (IST)

தெருக்களில் தவித்த ஆதரவற்றோர் மீட்பு: சிகிச்சை முடிந்து முதியோர் இல்லத்தில் அனுமதி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:52:36 PM (IST)

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:06:08 PM (IST)

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:51:14 PM (IST)










டேய்Dec 2, 2025 - 12:58:57 PM | Posted IP 172.7*****