» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் : திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு
திங்கள் 1, டிசம்பர் 2025 12:20:12 PM (IST)

தூத்துக்குடியில் பெண்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சோட்டையன்தோப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையாவை முற்றுகையிட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, பொதுமக்கள் மீது திமுக தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி பொறுப்பாளர் பொன்பாண்டி (எ) பார் ரவி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சிகிச்சைக்காக துத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அளித்த புகாரின் பேரில், பெண்களை அவதூறாக பேசி, ஜாதி பெயரை கூறி, தாக்கி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொன்பாண்டி (எ) பார் ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வயல் வேலைக்குச் சென்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு
புதன் 10, டிசம்பர் 2025 11:03:21 AM (IST)

பைக் நிலை தடுமாறி விழுந்ததில் துறைமுக தொழிலாளர் பரிதாப சாவு
புதன் 10, டிசம்பர் 2025 10:54:35 AM (IST)

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)










