» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கடலில் படகு இரண்டாக உடைந்து விபத்து: மீனவர் தப்பினார் - மற்றொருவர் மாயம்!
திங்கள் 17, நவம்பர் 2025 4:25:54 PM (IST)
முட்டம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது படகு இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் நீந்தி தப்பினார். மேலும் ஒருவர் கடலில் மாயமானார்.
கன்னியாகுமரி மாவட்டம் – குளச்சல் சட்டமன்ற தொகுதியில் உள்ள முட்டம் ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயரின் மகன் சுமன் ( 32 வயது) மற்றும் சத்தியான் மகன் ரகு ஆகிய இரு மீனவர்கள் கொல்லத்தில் மீன்பிடி தொழில் முடித்து முட்டம் நோக்கி கடற்கரை வழியாக வந்தபோது திடீர் அலைக்காற்றில் வள்ளம் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.
இதில் ரகு நீந்தி நீரோடி பகுதியில் கரை சேர்ந்தார். ஆனால் சுமன் இதுவரை கரை திரும்பவில்லை. அவரை மீட்பதற்கு கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், கடலோர காவல்துறை, மீன்வளத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட சஹகார் பாரதி தலைவரும் முன்னாள் கூட்டுறவு இணைய தலைவருமான இ.எஸ். சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










