» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் ஆட்சியர் வழங்கினார்
திங்கள் 17, நவம்பர் 2025 4:10:08 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி பெற்ற 31 மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 14 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் குறை களையும் கூட்டத்தில், கலைபண்பாட்டுத் துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024 -2025ம் ஆண்டின் பகுதி நேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மையத்தில் கிராமியப்பாடல், வில்லுப்பாட்டு, புலியாட்டம், ஒயிலாட்டம் ஆகிய பயிற்சிகளில் பயிற்சி பெற்று தேர்வு எழுதி சான்றிதழ் பெற்ற 31 மாணவ மாணவியர்களுக்கும் மற்றும் பங்கேற்பு சான்றிதழ்களை 09 மாணவ மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) வள்ளி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, துணை ஆட்சியர் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








