» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய வீடு ஒதுக்க கோரி பெண் தர்ணா போராட்டம்
திங்கள் 17, நவம்பர் 2025 3:39:46 PM (IST)

இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் புதிய வீடு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து இரு குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் நிஷாந் மனைவி பாஸ்டினா மெஜல்லா இவர் இன்று தன் இரு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், இரு குழந்தைகளுடன் முகாமில் வசிப்பதாகவும் தன்னுடைய குடும்பத்திற்கு புதிய வீடு ஒதுக்கீடு செய்து தரும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தான் இருக்கும் பழைய வீட்டில் அடிக்கடி திருட்டு போவதாகவும் இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் எனவே தனக்கு புதிய வீடு ஒதுக்கீடு செய்து தரப்பட வேண்டுமென ஆட்சியரிடம் மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். சிப்காட் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர் போராட்டத்தை கைவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










