» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட கோரிக்கை..!

திங்கள் 17, நவம்பர் 2025 3:20:00 PM (IST)



தூத்துக்குடியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை காலி செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒன்றிய செயலாளர் சங்கரன் மற்றும் பொதுமக்கள்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், தூத்துக்குடி தாலுகா மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி ராஜூவ்காந்தி நகர், கோமஸ்புரம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மக்கள் கட்டுமானம், உப்பளம், மீன்பிடி, தினக்கூலி தொழிலாளர்கள் குடியிருந்து வருகிறார்கள். இந்த மக்களை வரும் 30ந் தேதிக்குள் மேற்படி வீடுகளை காலி செய்து கொடுக்க வேண்டும் என்கிறார்கள். 

தற்போது மழைகாலம் என்பதால் வாடகை வீடு கிடைப்பதில் சிரமமாக உள்ளது. அதனால் பிளாக் 1 முதல் 17 பிளாக்கள் மொத்தமாக காலி செய்ய இயலாது. 2 பிளாக் வீதம் காலி செய்து மேற்படி வீடுகளை பழுதுபார்க்க வேண்டுகிறோம். இப்படி செய்தால் பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory