» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடகு வைத்த நகைகள் மோசடி: ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் !
திங்கள் 17, நவம்பர் 2025 3:07:23 PM (IST)

ஏரலில் அடகு கடை உரிமையாளர் நகைகளை மோசடி செய்துவிட்டதாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் நகை அடகு கடை நடத்தி வருபவர் சிவா என்ற சிவசுப்பிரமணியன். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். கடனை செலுத்திய பின்னர், நகைகளை மீட்க சென்ற போது நகைகளை கொடுக்க சிவா மறுத்துவிட்டாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் ஏரல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










