» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குமரி மாவட்டத்தில் இதுவரை 2,64,716 எஸ்ஐஆர் படிவங்கள் பதிவு: ஆட்சியர் தகவல்

திங்கள் 17, நவம்பர் 2025 12:23:04 PM (IST)



குமரி மாவட்டத்தில் இதுவரை 2,64,716 கணக்கீட்டு படிவங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம் - 2026 ஆனது 01.01.2026-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நமது கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று கணக்கீட்டு படிவம் விநியோகம் செய்யும் பணி 04.11.2025 முதல் வீடு வீடாக சென்று கணக்கெடுப்புப் படிவத்தினை வழங்கி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளது தேதி வரை 94.10 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுக்கடை முஸ்லீம் தொடக்கப்பள்ளி, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொலையாவட்டம் புனித மேரி தொடக்கப்பள்ளி, இரையுமன்துறை அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (16.11.2025) பிற்பகல் 12.00 மணி வரை 2,64,716 கணக்கீட்டு படிவங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கணக்கீட்டு படிவங்களை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யவும், தங்களது பெயர் 2026 வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கு, வாக்குசாவடி நிலை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன். இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கணக்கீட்டு படிவங்களை நிரப்பபவும் மற்றும் திரும்ப ஒப்படைக்கவும் வாக்காளர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார். 

ஆய்வில் பத்மநாபபுரம் சட்டமன்ற உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ராஜகேசர் (கிள்ளியூர்), வாக்குசாவடி நிலை அலுவலர்கள், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory