» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாதி சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 17, நவம்பர் 2025 12:11:04 PM (IST)

சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து காட்டு நாயக்கன் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல், கணேசபுரம் வார்டு 15-ல் கடந்த 120 ஆண்டுகளாக வசித்து வரும் இந்து காட்டு நாயக்கன் சமூக மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களால் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தும் அவலம் உள்ளது.
அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் சலுகைகள் கிடைக்காமல் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளதாகவும், குலத் தொழிலான பன்றி வளர்ப்பு மற்றும் குறி சொல்லும் தொழிலில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு வருவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து, சான்றிதழ் வழங்க உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









