» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கார்த்திகை பிறப்பு: ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்!
திங்கள் 17, நவம்பர் 2025 11:18:59 AM (IST)

கார்த்திகை மாதம் பிறந்ததை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் கார்த்திகை மாதத்தில் முதல் நாள் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள மூக்கரை பிள்ளையார் கோவிலில் இன்று அதிகாலை முதல் ஐயப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். ஏராளமான குழந்தைகளும் மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர்.
கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு இருமுடி தாங்கி பக்தர்கள் செல்வது வழக்கம். ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லக்கூடிய பக்தர்களும் இன்று மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். மேலும், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்து பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










