» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது!
ஞாயிறு 16, நவம்பர் 2025 9:30:54 AM (IST)
தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் மடத்தூர் - சோரீஸ்புரம் ரோட்டில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்தில் அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ், சப் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் அங்கிருந்து 3.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் 3வது தெரு, ஆறுமுகசாமி மகன் ஹரிகிருஷ்ணன் @ மண்ணென்னை ஹரி (54), மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மடத்தூர், ஈபி காலனி 2வது தெரு வேல்சாமி ரவிக்குமார் (53), வண்ணார் 1 வது தெரு ஹரி கிருஷ்ணன் மகன் சந்திரசேகர் (28) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)










