» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!

சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், சேவை குறைபாடு காரணமாக ஒரு தனியார் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ரூ. 20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சார்ந்த அழகுமுத்து தனியார் என்பவர் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியிலுள்ள ஒரு எண்டர்பிரைசஸிடம் கூலர் மெஷின் வாங்கியுள்ளார். அதில் பழுது ஏற்பட்டதால் அதில் வைத்திருந்த பூக்கள் அழுகியுள்ளது. ஆகவே சர்வீஸ் செய்து தர மேற்கண்ட கடைக்காரரை அணுகியுள்ளார். 

ஆனால் கடைக்காரர் பழுதை முழுமையாக சரி செய்து கொடுக்கவில்லை. ஏற்கனவே பழுதடைந்த கூலரை பெற்றுக் கொண்டு புதிய கூலர் மெஷின் மாற்றிக் கொடுக்குமாறு புகார்தாரர் கேட்டுள்ளார். இதற்கும் கடைக்காரர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தனியார் எண்டர்பிரைசஸ் கூலர் மெஷினை நல்ல முறையில் சரி செய்து தர வேண்டும் என்றும், மேலும் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 10,000, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் ரூபாய் 20,000 ஐ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தந்தை இறந்த மனவேதனையில் மகன் தற்கொலை!

புதன் 10, டிசம்பர் 2025 8:01:45 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory