» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது : இயக்குநர் கௌதமன் பேட்டி
வெள்ளி 14, நவம்பர் 2025 8:07:01 AM (IST)
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான கௌதமன் கூறினார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் லஞ்சம், கொலை, கொள்ளை தலை விரித்து ஆடுகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற நிலை உள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் எந்தக் காலக்கட்டத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமாக இருந்ததில்லை.எதிர்கால தலைமுறையை குழி தோண்டி புதைக்கக்கூடிய செயல்களை திமுக மற்றும் அதிமுக செய்து வருகிறது. 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். மேகதாது அணை பிரச்னையில் மத்திய அரசு கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்பதே நேர்மையற்ற அறமற்ற நிலைப்பாடாகும். கர்நாடகத்தில் அணை கட்டப்பட்டால் 20 டிஎம்சி தண்ணீர் கூட தமிழகத்துக்கு வராது.
எஸ்ஐஆர் கடைசி நேரத்தில் கொண்டுவரப்படுவது சந்தேகத்துக்குரியது. இத்திட்டத்தின் மூலம் பிகாரில் அதிகளவில் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்துக்கு விஜய் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஸ்டாலினுக்கும் நல்ல உறவு உள்ளது. எனினும் வீழ்த்தப்படபோவது யார் என்பதை புரிந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது என்று கூறினார்.
மக்கள் கருத்து
SOORIYANNov 14, 2025 - 12:36:10 PM | Posted IP 172.7*****
தமிழ்நாட்டில் யார் அரசியல் பேசுவது என்ற விவஸ்தை இல்லை
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி ஏற்றியதால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் மரக்கிளை முறிந்து விழுந்து பக்தர் காயம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:02:31 AM (IST)











srinivasanNov 15, 2025 - 11:43:24 AM | Posted IP 162.1*****