» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காடல்குடி காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!
வியாழன் 13, நவம்பர் 2025 9:09:28 PM (IST)

காடல்குடி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (13.11.2025) காடல்குடி காவல் நிலையத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய போலீசாரின் உடைமைகளை (Kit Inspection) பார்வையிட்டும், அங்கு பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.
மேலும் மேற்படி காவல் நிலைய போலீசாரிடம் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், புகார் மனு பதிவு செய்ததற்கான வரவேற்பு சீட்டை (Reception Slip) வரவேற்பாளர் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின் போது விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் : 20 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.75.25 லட்சம் வசூல்!
சனி 18, ஜூலை 2026 5:17:07 PM (IST)

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை முயற்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்!
சனி 18, ஜூலை 2026 4:53:16 PM (IST)

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)

ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:46:17 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)








