» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தசரா திருவிழா, கந்தசஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு எஸ்பி பாராட்டு!

வியாழன் 13, நவம்பர் 2025 8:04:12 PM (IST)



குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்களுக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் கடந்த 2 மாதங்களில் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக எட்டையபுரம், ஆத்தூர், கோவில்பட்டி மேற்கு, ஆறுமுகநேரி ஆகிய நிலையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார்.

அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக சிப்காட், விளாத்திகுளம், தாளமுத்துநகர், தூத்துக்குடி தென்பாகம் ஆகிய காவல் நிலையங்களும்,

அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் கோப்புக்கு எடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்காக சிப்காட், முறப்பநாடு, கோவில்பட்டி மேற்கு மற்றும் திருச்செந்தூர் ஆகிய காவல் நிலையங்களும் தூத்துக்குடி மாவட்டத்திற்குள் தேர்வு செய்யப்பட்டடு  மேற்படி 10 காவல் நிலையங்களின் சிறப்பான நடவடிக்கைகளுக்காக அதன் காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும்,

மேலும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மகேஷ்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  இன்று (13.11.2025)  மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory