» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5,47,500 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
வியாழன் 13, நவம்பர் 2025 5:25:01 PM (IST)
சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தனியார் நிதி நிறுவனம் ரூ.5,47,500 வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சார்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக சேமித்து வைத்திருந்த கொப்பரைத் தேங்காய் அனைத்தும் சேதமடைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
இதற்கு காப்பீடு செய்ததன் அடிப்படையில் இழப்பீடு கோரியுள்ளார். ஆனால் இது இழப்பீட்டுக்கு பொருந்தாது என காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் அதிகப்படியாக காப்பீட்டு தொகை ரூ.3,37,500 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.2,00,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.5,47,500 ஐ ஆறு வார காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத் தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் முதல்வர்: தூத்துக்குடியில் தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!
ஞாயிறு 10, மே 2026 12:36:05 PM (IST)

முத்துநகர் எக்ஸ்பிரஸ் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை : தூத்துக்குடியில் சோகம்
ஞாயிறு 10, மே 2026 12:27:59 PM (IST)

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை : மே 29-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!
ஞாயிறு 10, மே 2026 9:58:52 AM (IST)

தூத்துக்குடியில் தடைக்காலத்தால் எகிறும் மீன் விலை : பொதுமக்கள், வியாபாரிகள் குவிந்தனர்!!
ஞாயிறு 10, மே 2026 9:55:39 AM (IST)

குடோன் வசதி இல்லாததால் மழையில் நனைந்து 500 நெல் மூட்டைகள் நாசம் : விவசாயிகள் கவலை!
ஞாயிறு 10, மே 2026 9:38:57 AM (IST)

வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பை மாநில ஆக்கி போட்டிகள் தொடக்கம்: முதல் போட்டியில் தூத்துக்குடி வெற்றி
ஞாயிறு 10, மே 2026 9:32:04 AM (IST)










