» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)
ஓட்டப்பிடாரத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் சங்கரன் (48). இவர் முப்பிலிவெட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மேரிலில்லி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சங்கரன் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி அடிக்கடி கண்டித்துள்ளார்.
கடந்த 7-ந்தேதி மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதைக்கண்டு ஆவேசமடைந்த மேரிலில்லி தட்டிக்கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு நேற்று முன்தினம் காலையும் தொடர்ந்தது. இதனால் மனமுடைந்த சங்கரன் மாலையில் முப்பிலிவெட்டி உள்ள மயானத்திற்கு சென்றார்.
அங்கு தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த மதுபாட்டிலுக்குள் பூச்சிக்கொல்லியை கலந்து குடித்தார். இதனால் உயிருக்கு போராடிய சங்கரன் உடனே தனது மனைவி மேரிலில்லியை செல்போனில் தொடர்புகொண்டார். தான் விஷம் குடித்துவிட்டதாக உருக்கமாக பேசினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மேரிலில்லி தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் அங்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சங்கரனை மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரன் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










