» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 3பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் கடந்த 09.10.2025 கொலை முயற்சி வழக்கில் மேலவாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மாகுட்டி மகன் ஆறுமுக நயினார் (23), ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுடலைகண்ணு (24) மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி(23) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (07.11.2025) புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த ஆண்டு இதுவரை 119 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
புதன் 10, டிசம்பர் 2025 10:00:34 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
புதன் 10, டிசம்பர் 2025 8:29:43 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
புதன் 10, டிசம்பர் 2025 8:06:05 AM (IST)










