» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயில் சிறுபாலம் கட்டும் பணியை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பக்கிள்ஓடைக்கு கழிவுநீர் செல்லும் கால்வாயில் அண்ணாநகர் 11வது தெருவில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் முறையிட்டனர். இதனையடுத்து அவர் அந்த பகுதியில் சிறிய பாலம் அமைத்து கழிவுநீர் தடையின்றி செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் சிறு பாலம் கட்டும் பணியையும், கழிவுநீரை வெளியேற்றுவது தொடர்பான பணியையும் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னா் இதுபோல் அண்ணாநகர் 6வது மற்றும் 7வது தெருவிற்கு இடையிலும், 9வது மற்றும் 10வது தெருவிற்கு இடையிலும் உள்ள குறுக்குத்தெருக்களில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியையும் அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர் கனகராஜ், வட்டச் செயலாளர் பாலு (எ) பாலகுருசாமி, பெருமாள் கோவில் முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமார், கல்யாணி, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் மார்கழி மாதம் பூஜைகள் : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 8:39:31 AM (IST)

கள்ளக்காதலை கண்டித்த வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை: அண்ணன்-தம்பிக்கு போலீஸ் வலைவீச்சு!!
புதன் 10, டிசம்பர் 2025 8:34:30 AM (IST)

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேருக்கு 4 ஆண்டு சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 10, டிசம்பர் 2025 8:32:02 AM (IST)

பைக்கில் ரேஷன் அரிசி கடத்திய வியாபாரி கைது
புதன் 10, டிசம்பர் 2025 8:29:43 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தந்தை கைது!
புதன் 10, டிசம்பர் 2025 8:06:05 AM (IST)

தந்தை இறந்த மனவேதனையில் மகன் தற்கொலை!
புதன் 10, டிசம்பர் 2025 8:01:45 AM (IST)










