» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வாலிபர் குத்தி கொலை: பழக்கடை அதிபர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 11:19:23 AM (IST)
தூத்துக்குடியில் பெண்கள் இடையே ஏற்றட்ட தகராறில், வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த பழக்கடை அதிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அழகேசபுரம் 1வது தெருவைச் சேர்ந்தவர் உதயகுமார் மகன் சோலையப்பன் (23), கூலி வேலை செய்து வருகிறார். இவரது தாயார் இந்திராவுக்கும் அவரது அக்கா பரமேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் நடுரோட்டில் நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது பக்கத்து வீட்டு சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி வள்ளி சண்டையை விலக்கி விட்டாராம்.
அப்போது அங்கு வந்த சோலையப்பன் வள்ளியிடம் எனது அம்மா யாருடையும் சண்டை போடுவார்கள் அதை கேட்க நீங்கள் யார் உங்கள் வேலையை பார்த்துவிட்டு போங்கள் என்று அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த வள்ளி இந்த சம்பவம் குறித்து தனது மகன் செல்வகுமார் (25) என்பவரிடம் கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் வீட்டுக்குள் இருந்த சோலையப்பனை வெளியே வரவழைத்து அவரை சரமாரியாக கத்தியால் குத்தினாராம்.
இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சோலையப்பனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி செல்வ குமாரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட செல்வகுமார் அந்த பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார் மேலும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கொலை செய்யப்பட்ட சோலையப்பனுக்கு திருமணம் ஆகவில்லை. கொலை குறித்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:06:08 PM (IST)

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:51:14 PM (IST)

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: ரூ.50,000 வரை பரிசு வெல்ல அழைப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:20:04 PM (IST)

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற தூத்துக்குடி இளைஞருக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:37:20 PM (IST)









