» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிஎம் பள்ளியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:53:12 AM (IST)



தூத்துக்குடி சிஎம் மேல்நிலைப் பள்ளியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.

தூத்துக்குடியின் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான வ.உ. சிதம்பரனார் நினைவு மேல்நிலைப்பள்ளி திகழ்கிறது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளி 1934 முதல்  செயல்பட்டு வருகிறது. 90 வருடங்களுக்கு மேலாக மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி வரும் இப்பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற பழைய மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்; தங்கள் பழைய தோழமைகளை குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்தி உரையாடி மகிழ்ந்தனர்.    தாங்கள் படித்த பள்ளியையும் பழைய நண்பர்களையும் சந்திப்பதற்காக வெளியூரிலிருந்தும் வந்து கலந்து கொண்டனர்.  தங்களின் பழைய நினைவுகளை நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும், ஆசிரியர் முன்னிலையில் பகிர்ந்து கொண்டதைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

இந்நிகழ்ச்சி பள்ளியின் தாளாளர் த.வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம், ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.வள்ளியம்மாள், மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர் எஸ்.சங்கரேஸ்வரி பள்ளியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், டி.சோமநாதன் முன்னிலை வகித்தனர். வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஜெபத்தாய், ஜோதி, சந்திரா, வள்ளியம்மாள், கல்யாணி, சொர்ணம், வேலம்மாள்,  முத்துஸ்ரீவரமங்கை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பழைய மாணவர்கள் கண்ணன், ராம்பாபு, வீரபாகு, மாரிச்செல்வம்,  வீரமுத்துராஜா, ஆறுமுகம், வடிவுக்கரசி ஆகியோருக்கு கலந்து கொண்ட நண்பர்கள் தங்கள் சந்தோஷத்தையும் நன்றியையும் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory