» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:43:14 AM (IST)



தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்கப்படாததை கண்டித்து வரும்23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில்   சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சங்க செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் சலுகை விலை வீட்டுமனை இடங்கள் பல்வேறு மாவட்டங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசின்  சலுகை விலை வீட்டுமனை அரசு வழங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.

பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு இது குறித்து அக்டோபர் 23ம் தேதி காலை 10 மணி அளவில் தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகம் முன்பு நடத்த அனுமதி கடிதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் கொடுக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வரும் தீபாவளிக்கு கடந்த ஆண்டு போல ஸ்பான்சர் மூலம் உறுப்பினர்களுக்கு தீபாவளி தொகுப்புகள் சிறப்பாக வழங்க கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது. சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து அவர்கள் பணி தன்மை ஆராய்ந்து வரும் பொதுக்குழு ஒப்புதலுடன் சங்கத்தில் சேர்ப்பதற்கு இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்திமுத்து மற்றும் செயற்கு உறுப்பினர்கள் குமார், கண்ணன், முத்துராமன், ராஜன் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory