» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து மீனவர் சாவு!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:22:28 AM (IST)
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மீனவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கபில் (25). மீன்பிடித் தொழில் செய்து வந்தார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 7ஆம் தேதி மீன்பிடித் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்த கபில், அங்கிருந்த மின்மாற்றியை எதிர்பாராமல் தொட்டுள்ளார்.
அப்போது, மின்சாரம் பாய்ந்து பலத்த காயமுற்ற அவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








