» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன் விரோதம்: காரை சேதப்படுத்திய 4 பேர் கைது!
ஞாயிறு 12, அக்டோபர் 2025 9:20:05 AM (IST)
கயத்தாறில் முன் விரோதம் காரணமாக காரை சேதப்படுத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம் வெள்ளாளன்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் வேலு மகன் கிருஷ்ணசாமி (70). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் இருளப்பனுக்கும் இடையே நிலப் பிரச்னை குறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் அக். 6ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு பின், கிருஷ்ணசாமி காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தாராம். இருளப்பனின் தூண்டுதலின்பேரில், அவரது உறவினர்கள் காரை வழிமறித்து தாக்கியதில் கார் சேதமடைந்ததாம். இது குறித்து கிருஷ்ணசாமி அக். 7ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து காரை சேதப்படுத்திய நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் மதுரை ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் சாலையைச் சேர்ந்த தங்கம் மகன் வீரபாண்டி (39), அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிகண்டன் (25), மதுரை காமராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் கண்ணன் (39), மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த முத்தையா மகன் மணிகண்டன் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது: 2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள், பைக் பறிமுதல்!
புதன் 10, ஜூன் 2026 9:16:40 PM (IST)

சாலை விபத்தில் அரிசிக்கடை உரிமையாளர் பலி!
புதன் 10, ஜூன் 2026 8:20:13 PM (IST)

முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 10, ஜூன் 2026 4:53:29 PM (IST)

ஏரல் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் - 3பேர் கைது!
புதன் 10, ஜூன் 2026 4:48:08 PM (IST)

கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
புதன் 10, ஜூன் 2026 4:32:10 PM (IST)

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் தரிசனம்!
புதன் 10, ஜூன் 2026 4:02:44 PM (IST)









