» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் மோதி டீ மாஸ்டர் பலி: நண்பர் உட்பட 3பேர் காயம்!
சனி 11, அக்டோபர் 2025 11:25:38 AM (IST)
தூத்துக்குடியில் பைக் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் உயிரிழந்தார். அவரது நண்பர் மற்றும் பைக்கில் வந்த 2பேர் காயம் அடைந்தனர்.
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீதுமகன் முகமது அனிபா (65). இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் அருகில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்ததும் தனது நண்பரான பாஸ்கர் (40) என்பவருடன் பீச் ரோட்டில் உள்ள ரோச் பூங்கா அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த வேகமாக பைக் கட்டுப்பாடை இழந்து இவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் முகமது அனிபா, அவரது நண்பர் பாஸ்கள் மற்றும் பைக்கில் வந்த தூத்துக்குடி லயன்ஸ் டவுன் சேர்ந்த பிராங்கிளின் மகன் ஆகாஷ் (19), அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்த சுரேஷ் குமார் மகன் பிரவீன் குமார் (20) ஆகிய 4பேரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு டாக்டர்க்ள பரிசோதனை செய்தபோது முகமது அனிபா இறந்தது தெரியவந்தது. மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








