» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மின்னல் தாக்கி வாலிபர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்
வெள்ளி 10, அக்டோபர் 2025 8:27:52 PM (IST)
விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். 3பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வி.சுப்பையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசகம் மகன் குருமூர்த்தி (35) தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த விவசாய பணியாளர்கள் 8 பேருடன் சேர்ந்து மிளகாய் மற்றும் வெங்காயப் பயிர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெய்த கனமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த விவசாய பணியாளர்கள் கனகா, வசந்தா, சென்னக்காள் ஆகிய மூன்று பெண்களும் படுகாயம் அடைந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காடல்குடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்னல் தாக்கி உயிரிழந்த குருமூர்த்தியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது கணக்குக்குழு 12ம் தேதி ஆய்வு : ஆட்சியர் தகவல்!
திங்கள் 10, நவம்பர் 2025 8:17:57 AM (IST)

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் டாஸ்மாக் ஊழியர் விஷம் கலந்து குடித்து தற்கொலை!
திங்கள் 10, நவம்பர் 2025 8:12:24 AM (IST)

கணவரை பிரிந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
திங்கள் 10, நவம்பர் 2025 8:04:41 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த விஏஓ உயிரிழப்பு!
திங்கள் 10, நவம்பர் 2025 7:59:49 AM (IST)

காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!!
திங்கள் 10, நவம்பர் 2025 7:49:16 AM (IST)

வாலிபரை அரிவாளால் தாக்கி பைக், பணம் பறிப்பு: சிறுவன் உள்பட 3 பேர் கைது
திங்கள் 10, நவம்பர் 2025 7:46:35 AM (IST)








