» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச விண்வெளி வார விழா: மாதிரி ராக்கெட் ஏவி அசத்திய அரசு பள்ளி மாணவிகள்!

வெள்ளி 10, அக்டோபர் 2025 5:03:37 PM (IST)



கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சர்வதேச விண்வெளி வார விழாவில் மாணவிகள் மாதிரி ராக்கெட் ஏவி அசத்தினர்.

உலக நாடு முழுவதும் விண்வெளி அறிவியலை மக்களிடம் கொண்டு செல்ல அக்டோபர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விண்வெளி வார விழா கொண்டாடப்படுகிறது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்   பாட்டிலில் கால்பங்கு நீர் நிரப்பி காற்றடைத்து மாதிரி ராக்கெட்டை வானில் ஏவி அசத்தினர்.மாணவிகள் சர்வதேச விண்வெளி ஆய்வு மைய  மாதிரிகளை அட்டையில் உருவாக்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் தலைமை வகித்தார்.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர்கள் கிரேனா,கமலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்து கொண்டு மாதிரி ராக்கெட்டை வானில் ஏவுவது குறித்து பயிற்சி அளித்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வானில் ஏவப்பட்ட மாதிரி ராக்கெட்டை பார்த்து வியந்தனர்.


மக்கள் கருத்து

கீதாOct 10, 2025 - 06:57:25 PM | Posted IP 172.7*****

இது போன்ற ஆசிரியர்கள் அமைவது எல்லாம் மாணவர்களுக்கு இறைவன் கொடுத்த வரம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory