» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் அதிபர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் பரபரப்பு
வெள்ளி 10, அக்டோபர் 2025 10:55:40 AM (IST)
தூத்துக்குடியில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த ஓட்டல் உரிமையாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி முள்ளக்காடு காந்தி நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் சுவிசேஷ முத்து (42). இவர் தூத்துக்குடியில் பல இடங்களில் பிரியாணி நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தற்போது டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி அவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் உறவினர்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் அவரது மனைவியின் தங்கையின் கணவர் மாசானமுத்து உட்பட 5பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்த சுவிசேஷ முத்து, தன்னை தாக்கியவர்களை இது வரை ஏன் கைது செய்யவில்லை என்று கூறி சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும், அவர் காவல் நிலையம் முன்பு, கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீக்குளித்து இறந்த சுவிசேஷ முத்துவுக்கு முத்துகனி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 8:11:17 PM (IST)

தேர்தல் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: சிறப்புப் பார்வையாளர் பிரதாப் சிங் எச்சரிக்கை
சனி 11, ஏப்ரல் 2026 4:44:31 PM (IST)

கார் - பிக்கப் வாகனம் மோதி விபத்து: இளைஞர் பலி!
சனி 11, ஏப்ரல் 2026 4:33:49 PM (IST)

திருமணமான 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை: கோட்டாட்சியர் விசாரணை !
சனி 11, ஏப்ரல் 2026 4:30:17 PM (IST)

யார் பொறுப்பு? விழிப்புணர்வுத் திரைப்படம்: கலைஞர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பாராட்டு!
சனி 11, ஏப்ரல் 2026 4:05:07 PM (IST)

ஏப்ரல் 30-க்குள் சொத்துவரி செலுத்தினால் 5% தள்ளுபடி: தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:14:31 PM (IST)







