» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குண்டும் குழியுமான சாலை: கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்!
வியாழன் 9, அக்டோபர் 2025 11:25:55 AM (IST)

தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி, மில்லர்புரம் கிழக்கு பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காமல் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு, பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றன. இதன் மிக அருகில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் உள்ளது.
சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)






srinivasanOct 9, 2025 - 03:44:50 PM | Posted IP 104.2*****