» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

வியாழன் 9, அக்டோபர் 2025 11:05:28 AM (IST)



நாசரேத்தில், வாக்குத்திருட்டை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்தினர். 

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குத்திருட்டு நடப்பதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக  நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்ட மன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ‌.  கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

இதில் நாசரேத் நகர தலைவர் செல்வக்குமார், துணைத்தலைவர் செல்வின், நகர பொருளாளர் பிரேம்குமார், நகர ஓபிசி அணி தலைவர் காமராஜ், நகர திமுக செயலாளர் ஜமீன் சாலமோன், முன்னாள் நகர திமுக செயலாளர் ரவி செல்வகுமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மாமல்லன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞானதுரை. தெற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி மாரியம்மாள், நகர மகளிர் காங்கிரஸ் தலைவி பெபின் மேரி, ஆழ்வை வட்டார கிழக்கு தலைவர் பாலசிங், மேற்கு வட்டார தலைவர் கோதண்டராமன், மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

srinivasanOct 9, 2025 - 04:08:04 PM | Posted IP 172.7*****

total waste party and it should banned and destroy by our hindu god shortly

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory