» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்பவர் சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருது

புதன் 8, அக்டோபர் 2025 12:17:46 PM (IST)



சென்னையில் நடைபெற்ற விழாவில் நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் எம்பவர் சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

சென்னையில் சிஏஜி நுகர்வோர் அமைப்பின் 40 வது ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு சிஏஜி அறங்காவலர் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு தலைமை தாங்கினார். சிஏஜி செயல் இயக்குநர் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி சிவ சுப்பிரமணியன், இந்து பத்திரிக்கை குழும இயக்குநர் முரளி, தமிழ்நாடு அரசு அலுவலர் கிரீஸ், மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் சிஏஜியின் பணிகளில் சிறப்பாக ஒத்துழைத்துமைக்காகவும், நுகர்வோர் செயல்பாட்டாளராக சிறப்பாக செயல்பட்டு வருவதற்கும் நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினரும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் சங்கருக்கு சிறந்த சேவைக்கான விருதை ஓய்வு பெற்ற தமிழக அரசின் செலாளர் பணீந்திர ரெட்டி வழங்கினார்.

தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினராக தற்போது பதவி வகிக்கின்றார். இவர் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவு உறுப்பினராகவும், எம்பவர் இந்தியா கௌரவ செயலாளராகவும், சர்வதேச அளவில் நுரையீரல் நோய் பவுண்டேஷனின் தலைவராகவும், தேசிய அளவில் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவராகவும், இந்திய நுகர்வோர் உரிமை அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். தமிழ்நாடு மூத்த குடி மக்கள் நல இயக்கத்தின் நிறுவனராகவும் உள்ளார். தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு ஆலோசனைக் குழுக்களில் இடம் பெற்றுள்ளார். கடந்த 42 வருடங்களாக சமூக செயல்பாட்டாளராக உள்ளார்.

இவர் ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் பொறுப்புத் தலைவராகவும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையின் வட்டார தளபதியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். ஐக்கிய நாட்டு சபையில் நடைபெற்ற கூட்டங்களில் இந்திய அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டுள்ளார்.

மேலும் சமூக சேவை தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்டிரியா, ஸ்லோவோகியா, தென் ஆப்ரிக்கா, மலேசியா, இலங்கை, தாய்லாந்து, கென்யா, சிங்கப்பூர், வியட்நாம், துபாய், அபுதாபி, தோகா, ஷார்ஜா மற்றும் நேபாள் ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.

நுகர்வோர் ஊற்று, நுகர்வோரே உங்களுக்காக, நுகர்வோர் கையேடு, சுற்றுச்சூழல் கையேடு மற்றும் தாய்ப்பாலே சிறந்தது ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் மாநில அளவில் தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்பு விருதையும் பெற்றுள்ளார். மேலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகத்தால் பல பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். ரோட்டரி சங்கம் உட்பட பல அமைப்புகள் இவரை பாராட்டி கௌரவித்துள்ளனர்.


மக்கள் கருத்து

கே.கணேசன்.Oct 11, 2025 - 07:34:41 AM | Posted IP 172.7*****

மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐🙏🌹

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory