» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாயுமானவர் திட்டத்தில் அக்.5,6ல் ரேசன் பொருட்கள் விநியோகம் – ஆட்சியர் தகவல்!
வெள்ளி 3, அக்டோபர் 2025 9:00:29 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் அக்.05 மற்றும் 06 ஆகிய நாட்களில் அக்டோபர் 2025 மாதத்திற்கான முதல்வரது தாயுமானவர் திட்டம் (பொதுவிநியோகத்திட்டம்) மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளான 70 வயதிற்கு மேற்பட்ட வயதான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அக்டோபர் 2025 மாதத்திற்கான அவர்களது குடிமைப்பொருட்கள் 05.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 06.10.2025 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் அந்தந்தப் பகுதிகளுக்குரிய நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்கள் மூலம் அவர்களது வீட்டிற்கே சென்று விநியோகம் செய்யப்படும். இத்திட்ட பயனாளிகள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST)

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)










