» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதியதில் 2வாலிபர்கள் பலி: மற்றொருவர் படுகாயம்!

வெள்ளி 3, அக்டோபர் 2025 10:27:55 AM (IST)

வேம்பார் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் 2வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர் மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி அருகே உள்ள வடக்கு செவல் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரா மகன் பெத்துராஜ் (23), காலனி தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் ரமேஷ் (18), மேலத் தெருவைச் சேர்ந்தவர் வேல்வாசகம் மகன் மாரி லிங்கம் (19), இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று இரவு 3 பேரும் ஒரே பைக்கில் வேம்பாரில் உள்ள கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு நடந்த முளைப்பாரி ஊர்வலத்தை பார்ப்பதற்காக வடக்கு செவல் கிராமத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். சிலுவைபுரம் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

இதில் பெத்துராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 2பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வரும் வழியில் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். மாரி செல்வம் பலத்த காயத்துடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரவீனா வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த நெல்லை மாவட்டம் கிளாக்குளம் வீரவநல்லூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்த காத்தப்பன் மகன் மாரியப்பன் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பைக் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!

திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory