» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தற்கொலை!

வெள்ளி 3, அக்டோபர் 2025 8:42:25 AM (IST)

கோவில்பட்டியில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம், கண்ணன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் விக்னேஷ் (36). 2011ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்த இவர், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் காவலராக இருந்தார். இவருக்கும், சிவகாசியைச் சேர்ந்த மகாலட்சுமிக்கும் 2016இல் திருமணமானது. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். 

மகாலட்சுமி குழந்தைகளுடன் சிவகாசியில் வசித்து வருகிறார். தம்பதியிடையே சொத்து விவகாரத்தில் பிரச்னை இருந்ததாம். இதனிடையே, மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி தனது கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக மகாலட்சுமியின் வீட்டில் இருந்து வருகிறாராம். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், மகாலட்சுமி அவரது தங்கையை வைத்து விக்னேஷ் மீது சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாராம். 

போலீசார் வழக்குப் பதிந்து, விக்னேஷை கைது செய்தனர். இதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜாமீனில் வந்த அவர், கோவில்பட்டி லட்சுமிபுரம் மேல காலனியில் உள்ள பெற்றோர் வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சடலத்தை போலீசார் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory