» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு சாலைகளை சீரமைத்த பாஜகவினர்!
வியாழன் 2, அக்டோபர் 2025 10:51:08 AM (IST)

தூத்துக்குடியில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு பாஜகவினர் சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் உள்ள கோவில்களில் நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாநகரின் பல இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடாமலே உள்ளன. இதனால் சூரசம்ஹார நிகழ்ச்சிகளில் சப்பரங்கள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பாஜகவினர் பல இடங்களில் சாலையை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தாமோதர் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை பாஜகவினர் லாரியில் சரல் மண் கொண்டு சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில ஓபிசி அணி பொறுப்பாளர் சுவைதர், வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் நாகராஜன், பாஜக பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம், சிவா, பழக்கடை ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 7:44:20 PM (IST)

மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்!
திங்கள் 11, மே 2026 5:43:31 PM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்படப் போட்டி: ரூ.2 லட்சம் வரை பரிசு! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 11, மே 2026 5:06:43 PM (IST)

மாணவர்களுக்கான இலவசத் திறன் மேம்பாட்டு முகாம் : ஆட்சியர் தொடங்கி விஷு மகாஜன் வைத்தார்!
திங்கள் 11, மே 2026 4:22:57 PM (IST)

தூத்துக்குடியில் மின் கம்பத்தில் கார் மோதி விபத்து : வாலிபர் பலி; நண்பர்கள் மூவர் படுகாயம்!
திங்கள் 11, மே 2026 4:11:51 PM (IST)

மது விற்பனையில் ஆதார், கைரேகை கட்டாயம் : புதிய முறையை அமல்படுத்தக் கோரிக்கை!
திங்கள் 11, மே 2026 4:02:10 PM (IST)











JAIHINDOct 2, 2025 - 01:13:10 PM | Posted IP 172.7*****