» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது : அரிவாள் பறிமுதல்!

திங்கள் 29, செப்டம்பர் 2025 4:00:32 PM (IST)

தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி என்ற மாக்கான் (45) இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் எப்.சி.குடோன் ரவுண்டானா அருகே உள்ள டீக்கடை முன்பாக கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர. அப்போது, அந்த வழியாக வந்த கூலித் தொழிலாளி செந்தில் (44) என்பவரை வழிமறித்து, அவரது மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிக் கொண்டிருத்த அந்தோணி என்ற மாக்கானை தென்பாகம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. 


மக்கள் கருத்து

inbaOct 1, 2025 - 10:45:22 PM | Posted IP 162.1*****

shoot him

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory