» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் கூட்டம்: 82பேர் புகார் மனு அளிப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:06:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.
இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த 10 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 72 மனுதாரர்கள் என மொத்தம் 82 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் புதிய பயணியர் நிழற்குடை, ஐ லவ் நாசரேத் செல்ஃபி பாயிண்ட் திறப்பு விழா
சனி 14, பிப்ரவரி 2026 8:39:39 PM (IST)

தூத்துக்குடியில் அதிமுக போட்டி: முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேட்டி
சனி 14, பிப்ரவரி 2026 8:33:04 PM (IST)

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: இந்து முன்னணி கோரிக்கை!
சனி 14, பிப்ரவரி 2026 8:27:04 PM (IST)

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி திட்டங்கள் கலந்தாய்வு கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு!
சனி 14, பிப்ரவரி 2026 5:53:48 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மகா சனி பிரதோஷம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
சனி 14, பிப்ரவரி 2026 5:31:12 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் நாளை மகா சிவராத்திரி விழா: நான்கு கால சிறப்பு பூஜைகள் அறிவிப்பு!
சனி 14, பிப்ரவரி 2026 3:34:39 PM (IST)










