» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

புதன் 17, செப்டம்பர் 2025 3:35:35 PM (IST)



தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மற்றும் காவல்துறை அலுவலகத்தில் "சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் "சமூக நீதி நாள்” உறுதிமொழியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முன்னிலையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். 

மேலும், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேது ராமலிங்கம், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு மற்றும் அனைத்துத் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 




தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ஆம் நாள் சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் உட்பட காவல்துறை அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் மாவட்ட காவல் அமைப்பு பணி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களால் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


தூத்துக்குடி மாநகராட்சியில் தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் சி.ப்ரியங்கா முன்னிலையில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், உதவி ஆணையர் சரவணகுமார், நகர்நல அலுவலர் சரோஜா, கவுன்சிலர்கள் கீதா முருகேசன், சரவணகுமார், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory