» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மனு கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் பங்கேற்பு
புதன் 3, செப்டம்பர் 2025 8:49:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தில் காவல் நிலையங்களில் புகார் அளித்த 14 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 68 மனுதாரர்கள் என மொத்தம் 82 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:20:33 PM (IST)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் போகி பண்டிகை கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:47:24 PM (IST)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)









மனுகுமார்Sep 3, 2025 - 08:54:32 PM | Posted IP 162.1*****