» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கிரேன் வாகனம் மோதி டெய்லர் பலி - டிரைவர் கைது

புதன் 3, செப்டம்பர் 2025 11:08:00 AM (IST)

தூத்துக்குடியில் சைக்கிள் மீது கிரேன் வாகனம் மோதிய விபத்தில் டெய்லர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி முத்தையாபுரம் தோப்பு கீழ தெருவைச் சேர்ந்தவர் லெட்சுமண பாண்டியன் மகன் தேவராஜ் (70). இவர் டெய்லர் வேலை செய்து வருகிறார். நேற்று சைக்கிளில் திருச்செந்தூர் -  தூத்துக்குடி மெயின் ரோட்டில் தெற்கிலிருந்து வடக்காக வந்து கொண்டிருக்கும்போது எதிர் திசையில் வந்த ஹைட்ரா எஸ்கார்ட் கிரேன் வாகனம் அவர் மீது மோதியது. 

இதில் பலத்த காயம் அடை்நத தேவராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் வாகனத்தை ஒட்டி வந்த குளத்தூர் மேட்டு பனையூரரைச் சேர்ந்த  பெரியசாமி நம்பிராஜன் (30) என்பவரை கைது செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory